தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்டோ மீது கார் மோதி விபத்து: மாணவிகள் உள்பட மூவருக்கு காயம் - மாணவிகள் உள்பட மூவருக்கு காயம்

சென்னை: ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 2 மாணவிகள் உள்பட மூவருக்கு காயம் ஏற்பட்டது.

ஆட்டோ மீது கார் மோதி விபத்து
அமன்

By

Published : Apr 1, 2021, 10:38 PM IST

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அதில் பயணித்த இரண்டு மாணவிகள் பலத்த காயம் அடைந்தனர்.

சென்னை ஆர்.ஏ புரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் அமன். இவர் கோட்டூர்புரம் பாலம் நோக்கி சென்றுள்ளார். அப்போது அண்ணா பல்கலைக்கழக நூலகம் அருகே சென்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது அமன் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன், ஆட்டோவில் பயணித்த சென்னை பல்கலைக்கழக மாணவிகள் சிவப்பிரியா, ஸ்ரீ நித்தி ஆகியோர் பலத்தக் காயமடைந்துள்ளனர். தற்போது மூவரும் சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மாணவிகளை விபத்துக்குள்ளாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்கலைக்கழக மாணக்கர்கள் கோட்டூர்புரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த அடையார் துணை ஆணையர் சசாங் சாய், மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர். இது விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:யார் யார் எல்லாம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்? - விளக்கும் மருத்துவக் கல்லூரி முதல்வர் வசந்தாமணி

ABOUT THE AUTHOR

...view details