சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று(மார்ச்.31) உயர் கல்வித் துறைக்கான புதிய அறிவிப்புகளை துறையின் அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.
- அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் நிறுவனத் திட்டமிட்டலுடன் ஒருங்கிணைக்கப்பட்ட கற்றல் மேலாண்மை அமைப்பு மென்பொருள் ரூ.150 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
- ஐந்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொழிலகங்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய தொழிலிடைக் கல்வி பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.
- அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகளிலும் மேம்படுத்தப்பட்ட உற்பத்திக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.
- ஏழு அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 31 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1Gbps அளவிலான தொடர் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.
- மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக சென்னை மையப் பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மையம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- கோயம்புத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மின்சார வாகன இயக்க மையம் நிறுவப்படும்.
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
- அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிதாக தொடங்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
- மூன்று அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் கல்வி பயிலும் பொழுதே வருமானம் ஈட்டும் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்படும்.
- ஐந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை வணிக மேலாண்மை பட்டப்படிப்பும், ஐந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை கணினி பயன்பாட்டியல் பட்டப்படிப்பும் தொடங்கப்படும்.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் நாப்கின் எரிப்பான் இயந்திரம் வழங்கப்படும்.
- 2012-13ஆம் ஆண்டு மற்றும் 2022-23ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் ரூ.68.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
- பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.180 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளுக்கு தேவையான தளவாடங்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
- அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் கூடுதல் உணவு கூடம் ரூ.5.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
- அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் வளாகத்தில் உள்ள விடுதிகளில் இணைய வசதி ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
- அண்ணா பல்கலைக்கழக கோயம்புத்தூர் மண்டல வளாகத்தில் புதிய கல்விக் கட்டடம் ரூ.15.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
- மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 5 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.
- மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மனிதவள மேம்பாட்டு பயிற்சி அரங்கம் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
- சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள புகழ்பெற்ற நூற்றாண்டு விழா மண்டபம் புதுப்பிக்கப்படும்.
- சென்னை பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் பெண்கள் விடுதி கட்டப்படும்.
- தமிழ்நாடு ஆவணக காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் குறைவான மாணவர்கள் சேர்க்கை உள்ள ஒரு சில பாடப்பிரிவுகளை நீக்கி புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படும்.