சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டு நாட்கள் நடைபெறும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் புதுச்சேரி சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், சென் பிரிட்டோ பள்ளி நிறுவனர் விமலா ராணியும் கலந்துகொண்டார்.
'நாளை நமதே' விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி அமைச்சர் பேசுகையில், "தமிழ்நாட்டில் நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கான திறன்களை வளர்க்க வழிவகை செய்து கொடுக்கப்படுகிறது.
புதுச்சேரியில் நாராயணசாமி உதவியுடன் மாணவர்களின் தர மேம்பாட்டிற்கு வழிவகை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்களுக்குத் தேவையான கல்வி சம்பந்தப்பட்ட அனைத்து உதவிகளும் செய்துவரப்படுகிறது.
அதைப்பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, வேலைவாய்ப்புகளை எளிய முறையில் கிடைக்கும் பொருட்டு வழிவகுத்து தரப்படுகிறது" என்றார்.
மேலும், இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவியர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.