சென்னை : தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை அம்மன் கோவில் தெரு சேர்ந்தவர் ராகவன். இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு 3 மகன்கள். இரண்டாவது மகன் அருண்குமார் கிண்டியில் உள்ள ஸ்டேட் இன்ஸ்ட்டியூட் ஆஃப் காமர்ஸ் (State Institute of Commerce) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
அருண்குமார் கடந்த 3 வருடங்களாக பப்ஜி விளையாடி வந்து உள்ளார். மேலும் கடந்த ஒரு வாரமாக கல்லூரி கூட செல்லாமல் விளையாட்டில் மூழ்கி உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தாய் தந்தையினர் வேலைக்கு சென்றுள்ளனர்.
அப்போது கல்லூரி சென்று திரும்பிய அருண் குமாரின் சகோதர் கதவு பூட்டியதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது அருண் தற்கொலையில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவரது உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை பீர்க்கன்காரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்.
மேலும் அருண் குமார் தூக்கில் தொங்கும் முன்பு வரை பப்ஜி விளையாடியாடிதாகவும், இறந்தபிறகு கூட அவரது தொலைப்பேசிக்கு பப்ஜி விளையாட்டு தொடர்பாக மெசஜ் அனுப்பி வருவதாகவும் அவரது பெற்றோர் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க :பப்ஜி விளையாட்டிற்கு அடிமை: காணாமல்போன சிறுவன் கொலை