சென்னை: கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வர்ஷூ. ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மாணவியான இவர், இன்று காலை கோடம்பாக்கத்திலிருந்து கல்லூரிக்கு தி.நகர் வழியாக காரில் சென்றார். காரானது தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலை மேம்பாலத்தில் அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்திலேயே தலைக்குப்புற கவிழ்ந்தது.
தி.நகர் மேம்பாலத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்.. மருத்துவ மாணவி படுகாயம்! - ஓமந்தூரர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி
சென்னை தி.நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலை மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற கார் கவிழ்ந்த விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவி படுகாயமடைந்தார்.
தி.நகர் மேம்பாலத்தில் கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து
இதில் மருத்துவக் கல்லூரி மாணவி வர்ஷூ படுகாயமடைந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகாயமடைந்த மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க:முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமையும் வகுப்புகள்
Last Updated : Jan 27, 2023, 2:10 PM IST