சென்னை:மெரினா கடற்கரை நேதாஜி சிலை பின்புறம் இன்று அதிகாலை 10 மாணவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மாணவர் கடல் அலையில் சிக்கி உயிருக்குப் போராடினார். உடனடியாக அங்கு இருந்த மீனவர்கள் சிலர் கடலில் தத்தளித்த அந்த மாணவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்த போது, மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தார்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக அந்த மாணவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த மெரினா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.