தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹேர் கலரிங் அடித்ததால் கண்டிப்பு: கல்லூரி மாணவி தற்கொலை - ஹேர் கலரிங் அடித்ததால் கண்டிப்பு

ஹேர் கலரிங் அடித்து சென்ற மாணவியின் பெற்றோரை அழைத்து கல்லூரி நிர்வாகம் கண்டித்ததால் மாணவி தற்கொலையால் உயிரிழந்தார்.

கல்லூரி மாணவி தற்கொலை
கல்லூரி மாணவி தற்கொலை

By

Published : Mar 25, 2022, 4:14 PM IST

சென்னை: தாம்பரத்தில் உள்ள கடப்பேரி திரு.வி.க.நகர் பகுதியை சேர்ந்தவர் ராகவி (வயது 19). இவர் பல்லாவரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் இவர் ஹேர் கலரிங் செய்தபடி கல்லூரிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரது பெற்றோரை வரவழைத்து கல்லூரி நிர்வாகம் கண்டித்துள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தனது அறையில் நேற்று (மார்ச் 24) மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தாம்பரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது!

ABOUT THE AUTHOR

...view details