தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் கல்லூரிகள் திறப்பு: பலத்த பாதுகாப்பு - சென்னையில் பலத்த பாதுகாப்பு

சென்னையில் இன்று கல்லூரிகள் திறப்பால் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Protection  College Opening In Chennai  Chennai Police Protection  கல்லூரிகள் திறப்பு  சென்னையில் பலத்த பாதுகாப்பு
College Opening In Chennai

By

Published : Dec 7, 2020, 10:38 AM IST

சென்னையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக மூடியிருந்த கல்லூரிகள் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, மூன்றாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரியைத் திறக்க முடிவுசெய்துள்ளனர்.

இதனால், 'ரூட் தல' என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் பேருந்து, ரயில் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு அராஜகத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால் சென்னை காவல் துறையினரும், ரயில்வே காவல் துறையினரும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக தியாகராய கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரி, மாநில கல்லூரி போன்ற கல்லூரிகளுக்குச் செல்லக்கூடிய பேருந்து, ரயில் நிலையங்களில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதேபோல், பெரம்பூர், பிராட்வே, அமைந்தகரை, அரும்பாக்கம் உள்ளிட்ட வழித்தடங்களில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் ரகளையில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க:பாம்பனில் கடக்கும் ’புரெவி’ - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details