தனியார் கல்லூரிகளில் மூன்று தவணைகளில் கல்லூரி கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கல்லூரி கட்டணம் மூன்று தவணைகளாக வசூலிக்கலாம் - தமிழ்நாடு அரசு வழங்கிய அனுமதி
![கல்லூரி கட்டணம் மூன்று தவணைகளாக வசூலிக்கலாம் chennai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7953755-thumbnail-3x2-yu.jpg)
12:00 July 09
கல்லூரி கட்டணம் மூன்று தவணைகளாக வசூலிக்கலாம்
பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசு கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரியதோடு, அதற்கு தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021ஆம் ஆண்டில் ஏப்ரல் என மூன்று தவணைகளில் கட்டணம் வசூலிக்கலாம் என தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் மூலம் வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்