தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக சென்றடைய வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை

பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு முறையாக சென்றடைய வேண்டும் என்று அமைச்சர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அமைச்சர்கள் அறிவுரை
அமைச்சர்கள் அறிவுரை

By

Published : Dec 31, 2022, 8:05 AM IST

சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக் கரும்புடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்குவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தலைமை செயலத்தில் இருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பனும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோனையில் ஈடுபட்டனர்.

இந்தக் கூட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை இடையூறு இன்றி வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக கரும்பு, ரொக்க பணம் மக்களுக்கு முறையாக சென்றடைய வேண்டும். அதனை மாவட்ட ஆட்சியர்கள் கவனமாக கையாள வேண்டும் என்று அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:மஞ்சப்பை திட்டத்தை மறந்த பொதுமக்கள்: அரசின் தடைக்கு பலனில்லையா?

ABOUT THE AUTHOR

...view details