சென்னை:சுசீந்திரம் கோவில் ஓவியங்கள் அழிப்பு, திருவெள்ளறை கோவில் பணிகளை மூன்றாம் நபர்களுக்கு டெண்டர் விட்டது, சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் இடிக்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களில் நீதிமன்ற உத்தரவை மீறியதாக ரங்கராஜன் நரசிம்மன், வெங்கட்ராமன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் இன்று(நவ.1) விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆஜராகி, குத்தகை சொத்துகள் மூலம் வர வேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.
மனுதாரர்கள் தரப்பில், கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாக உள்ள பாக்கித் தொகையை மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.