சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் 5 தேதி முதல் மாநகராட்சியின் சார்பின் கடற்கரை பகுதிகளில் சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை என இருவேளைகளில் ஆய்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் 5 தேதி முதல் 8 தேதி வரை 4 நாட்களில் 1391 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் கடை உரிமையாளர்களிடமிருந்து 71 கி.கி. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.15,700 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.