பொள்ளாச்சியில் பெண்களை காதலிப்பதாக ஆசை வார்த்தைக் கூறிபாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து பணம் பறித்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின் வடு மறைவதற்குமுன், கோவை மாவட்டம், திருக்கனூர் பகுதியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிறுமி கொலைக் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி டிஜிபியிடம் மனு!
சென்னை: கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று டிஜிபி ராஜேந்திரனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
பாலியல் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி புகார்
6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவையில் 6 வயது சிறுமி கொலைவழக்கு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி காவல் துறை இயக்குனர் டிகே ராஜேந்திரனிடம், தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பினர் புகார் மனுவை அளித்தனர்.