தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை முதல் கொப்பரைத் தேங்காய் கொள்முதல்: அமைச்சர் துரைக்கண்ணு - pollachi jayaraman

சென்னை: கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நாளை முதல் ஆறு மாதங்கள் நடைபெறும் என அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

assembly

By

Published : Jul 11, 2019, 3:04 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் துணை அவைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழ்நாட்டில் கொப்பரைத் தேங்காயை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.

அதற்கு பதிலளித்து பேசிய வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, ‘தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க அரசு அனைத்துவிதமான நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. தற்போது தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில், விலை ஆதரவுத் திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் நான்கு லட்சத்து 35 ஆயிரத்து 621 ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில் இருந்து 470 கோடியே 64 லட்சம் தேங்காய்கள் உற்பத்தியாகின்றன. தேங்காய்களின் விலைக் குறையும்போது, விவசாயிகள் அவற்றை மதிப்புகூட்டி தேங்காய் கொப்பரைகளாக விற்பனை செய்துவருகின்றனர்.

சமீப காலமாக தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவாக இருந்துவருகிறது. விலை ஏற்ற-இறக்கத்தில் இருந்து விவசாயிகளை பாதுகாத்து, தேங்காய் கொப்பரைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் பொருட்டு, 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

தென்னை விவசாயிகளிடமிருந்து தேங்காய் கொப்பரையை எளிதில் கொள்முதல் செய்வதற்காக கொள்முதல் மையங்களை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மத்திய அரசினால் 2019ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான பந்து கொப்பரை கிலோ ஒன்றிற்கு 99 ரூபாய் 20 பைசா மற்றும் அரவைக் கொப்பரைக்கு கிலோ ஒன்றிக்கு 95 ரூபாய் 21 பைசா என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும்.

இந்தக் கொள்முதல் செய்யும் பணி நாளை முதல் ஆறு மாதங்கள் நடைபெறும். ஐந்தாயிரம் மெட்ரிக் டன் பந்து கொப்பரையும், 45 ஆயிரம் மெட்ரிக் டன் அரவைக் கொப்பரையும் கொள்முதல் செய்திட திட்டமிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details