சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. வழக்கமாக மார்ச் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் இளநீர் வியாபாரம் அதிகமாக இருக்கும்.
ஆனால் இந்தாண்டு கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், இளநீர் வியாபாரம், நீர் மோர் வியாபாரம், ஐஸ் கிரீம், குளிர்பான விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது ஊரடங்கு உத்தரவில் இருந்து சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் மீண்டும் சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனை குறிவைத்து சாலையோரங்களில் ஏராளமான இளநீர் வியாபாரிகள் தள்ளு வண்டி கடைகளை தொடங்கியுள்ளனர்.