தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் பரப்புரை' - வைகோ - MDMK

சென்னை: திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறேன் என்ரு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ

By

Published : Mar 21, 2019, 5:37 PM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, திமுக கூட்டணி சார்பில் நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் பரப்புரை மேற்கொள்ள உள்ளேன். தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அன்பு தங்கை கனிமொழியை ஆதரித்து ஏப்ரல் 16 ஆம் தேதி வரை பரப்புரையில் ஈடுபட இருக்கிறேன்.

சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்

இந்தியா முழுவதும் மோடி அரசுக்கு எதிர்ப்பு அலை வீசுவதுபோல, தமிழகத்தில் அதிமுக அரசுக்கும் எதிர்ப்பு இருக்கிறது. எனவே 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளே மகத்தான வெற்றியை பெறும். வாக்காளர்கள் அந்த தீர்ப்பை தருவார்கள் என்று நிறைந்த நம்பிக்கையோடு எனது பரப்புரையை நான் தொடங்க இருக்கிறேன், என்றார்.

மதிமுக தரப்பில் போட்டியிடுவதற்கு தேர்தல் ஆணையத்திடம் குறிப்பிட்ட சின்னம் ஏதாவது கேட்கப்பட்டு உள்ளதா என்ற கேள்விக்கு, எங்களது வேட்பாளர் வேட்புமனுவை தாக்கல் செய்யும்போதுதான் அதை பற்றிக் குறிப்பிட முடியும், என்றார்.

ABOUT THE AUTHOR

...view details