சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றை எழுதுவதற்கு மார்ச் மாதம் 7ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று 18 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு எழுத பயிற்சி:இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2002 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதலில் மார்ச் மாதம் 14ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவேற்றலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.
மேலும் இவர்களுக்கான கம்ப்யூட்டர் வழி தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்பொழுது ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை இடைநிலை ஆசிரியருக்கான தாள் ஒன்றுக்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கான தேர்வுகள் கம்ப்யூட்டர் மூலம் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.