தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் நிறுத்தம்: சுற்றறிக்கை அனுப்பவில்லை அமைச்சர் ஜெயக்குமார் - கூட்டுறவு வங்கியில் வரைபடம் வருத்தம்

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் நிறுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு சார்பிலும் கூட்டுறவுதுறை சார்பிலும் எந்த ஒரு சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

By

Published : Jul 15, 2020, 5:05 PM IST

சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் 118 வது பிறந்த நாளையொட்டி அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பென்ஜமின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன்பின் செய்தியாளரைச் சந்தித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்," காமராஜர் மாபெரும் பெருந்தலைவர், அவரின் பிறந்த நாளை தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்று மரியாதை செலுத்தப்பட்டது.
கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன், நேற்று (ஜூலை.14) கூட்டுறவு வங்கியால் வாய்மொழி உத்தரவாக தெரிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டன. இதற்கு தமிழ்நாடு அரசு சார்பிலும் கூட்டுறவுதுறை சார்பிலும் எந்த ஒரு சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன், காமராஜர் காலத்தில் கல்வி, தொழில்கள் சிறந்து விளங்கியது. அந்த வகையில், மாணவர்களுக்கு மன அழுத்தம் உருவாகாத அளவிற்கு கல்வித்தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக, உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details