தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சபாஷ் சரியான போட்டி... புறநகர் ரயில் சேவை vs மெட்ரோ! - Chennai metro

சென்னை: புறநகர் ரயில் சேவை வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு சென்னை மெட்ரோ பதிலடி அளித்துள்ளது.

மெட்ரோ
மெட்ரோ

By

Published : Feb 25, 2021, 7:23 PM IST

Updated : Feb 25, 2021, 8:19 PM IST

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கான ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் தினசரி ரயில் பயணத்திற்கு மெட்ரோ ரயில் ஏதுவாக இல்லை.

இந்நிலையில், குறைந்த செலவில் அதிவிரைவு பயணங்களுக்கு தங்களை அணுகும்படி புறநகர் ரயில் சேவையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிடப்பட்டது. அதில், புறநகர் ரயில் சேவையின் கட்டணம் மெட்ரோவுடன் ஒப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு பதிலடி தரும் விதமாக பதிவிட்டுள்ள சென்னை மெட்ரோ, 24 மணி நேரமும் பாதுகாப்புமிக்க ஏசி கோச் வசதியுடன் கூடிய சேவை தாங்கள் வழங்கிவருவதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, முறையான பராமரிப்புடன் இயங்கும் மெட்ரோ ரயில் நிலையங்களில் கால தாமதமற்ற பயணங்களை வழங்கிவருவதாக குறிப்பிட்டுள்ளது.

சென்னை மெட்ரோவின் கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள புறநகர் ரயில் சேவை, பொது மக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரிலேயே குறிப்பிட்ட தகவல் பகிரப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. சென்னை நகரை இணைப்பதில் புறநகர் ரயில் சேவையும் மெட்ரோவும் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் பல பகுதிகளில் இணைப்பு வசதிகளை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி எடுத்துவருவதாகவும் புறநகர் ரயில் சேவை சார்பில் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில் நிலையங்கள், முறையாக பராமரிப்பதில்லை, இரவு நேரங்களில் சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில், மெட்ரோ சார்பில் இக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Feb 25, 2021, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details