தனியார் பத்திரிக்கை நடத்திய ஆய்வில், அனைத்து துறைகளிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு, மூன்றாவது முறையாக தேர்வாகியுள்ளது. இதற்கு காரணமான தமிழ்நாடு மக்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் தனது நன்றியை தெரிவிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.
மூன்றாவது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு- முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்! - best state tamilnadu
சென்னை: மூன்றாவது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வாகி சாதனை புரிந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.

பழனிசாமி
அந்தப் பதிவில், "அரசு அலுவலர்கள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழ்நாடு மக்களின் ஒத்துழைப்பாலுமே "தொடர்ந்து 3ஆவது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு" தேர்வாகி சாதனை புரிந்துள்ளது. இவ்விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.