தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆ.ராசா மனைவி மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

தி.மு.க மக்களவை உறுப்பினர் ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரி மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆ.ராசா மனைவி மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
ஆ.ராசா மனைவி மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

By

Published : May 29, 2021, 9:26 PM IST

திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் இன்று( மே 29) காலமானார். அவரது மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், " திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரி உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

திராவிடத் தத்துவத்தினை அரசியல் பாடமாகப் பயின்று பொதுவாழ்வில் ஈடுபட்ட ஆ. ராசாவின் உயர்விலும், தாழ்விலும், நெருக்கடிகளிலும், சோதனைகளிலும் தோன்றாத் துணையாக உடனிருந்து அவரது வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர் அம்மையார் பரமேஸ்வரி. அவரது மறைவு ஏற்படுத்தும் பெருந்துயரால் வேதனையில் வாடும் ஆ. ராசாவின் கரங்களைப் பற்றி ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பரமேஸ்வரியின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆ. ராசா, இந்தத் துயரில் இருந்து மீண்டெழ, உடன்பிறப்பு என்ற சொல்லுக்கேற்ப கழகம் தோள் கொடுத்துத் துணை நிற்கும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:திமுக எம்.பி. ஆ. ராசாவின் மனைவி காலமானார்!

ABOUT THE AUTHOR

...view details