சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 1ஆம் தேதி, தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பாரிமுனை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் வரும் 28ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சியை திறந்து வைக்க திறந்து வைக்க வரும்படி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா இருவரும் நேரில் சென்று கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்தனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம கட்சியின் அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்து அழைப்பிதழை வழங்கினர்.