தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தேர்தல் ஆணையர் நியமிக்கும்போது எதிர்க்கட்சியினரிடம் ஆலோசிக்கனும்' - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முதலமைச்சர் வரவேற்பு - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஸ்டாலின் வரவேற்பு

பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் ஆலோசனையின்படியே தலைமைத் தேர்தல் ஆணையர் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 2, 2023, 8:30 PM IST

சென்னை:பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் ஆலோசனையின்படியே தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு அளித்து ட்விட்டர் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் ஆலோசனையின்படியே தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை வரவேற்று இருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்

துடிப்பான மக்களாட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாடு இன்றியமையாதது. தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டு வரும் தற்போதைய சூழலில், சரியான நேரத்தில் தலையிட்டு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் மிகுந்த முக்கியத்துவம் உடையது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஈரோடு கிழக்கு வெற்றி - அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details