தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்பேரவையில் கருணாநிதி படத்திறப்பு விழா சிறப்பு மலர் வெளியீடு.. புறக்கணித்த அதிமுக, பாஜக... - சட்டப்பேரவையில் கருணாநிதியின் சிறப்புப் பதிப்பு புத்தக வெளியீட்டு விழாவை அதிமுக பாஜக புறக்கணித்தது

சட்டப்பேரவை மண்டபத்தில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருப் படத் திறப்பு விழா சிறப்பு மலரினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் கருணாநிதியின் சிறப்புப் பதிப்பு புத்தக வெளியீட்டு விழாவை அதிமுக பாஜக புறக்கணித்தது தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு - முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவப் படத்திறப்பு விழா சிறப்பு மலர் வெளியீடு
சட்டப்பேரவையில் கருணாநிதியின் சிறப்புப் பதிப்பு புத்தக வெளியீட்டு விழாவை அதிமுக பாஜக புறக்கணித்தது தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு - முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவப் படத்திறப்பு விழா சிறப்பு மலர் வெளியீடு

By

Published : May 10, 2022, 10:58 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் இன்று (மே.10) தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப்பட திறப்பு விழா சிறப்பு மலர் வெளியிடும் நிகழ்ச்சி காலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப்பட திறப்பு விழா சிறப்பு மலரின் முதல் பிரதியை ஸ்டாலின் வெளியிட, அதை சபாநாயகர் அப்பாவு பெற்றுக்கொண்டார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருப் படத் திறப்பு விழா சிறப்பு மலரினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கு விழா மலரை வழங்கினார். அதனை தொடர்ந்து சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனிடையே, நிகழ்ச்சியில், காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட சட்டமன்ற கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அதிமுக, பாஜக உறுப்பினர்கள் விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும்- முதலமைச்சர் ஸ்டாலின்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details