தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளமை திரும்புதே....முதலமைச்சர் ஸ்டாலின் 'நியூ லுக்' சைக்கிள் பயணம் - முதலமைச்சர் ஸ்டாலின் சைக்கிளிங் வீடியோ

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை உத்தண்டி சுங்கச்சாவடி முதல் மாமல்லபுரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார். வெள்ளை டி-சர்ட், பச்சை ஜர்க்கினில் நியூ லுக்கில் யூத்தாக காணப்படுகிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின்  சைக்கிள் பயணம்
முதலமைச்சர் ஸ்டாலின் சைக்கிள் பயணம்

By

Published : Jan 29, 2022, 3:07 PM IST

Updated : Jan 29, 2022, 3:28 PM IST

சென்னை:முதலமைச்சர் ஸ்டாலின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் அக்கறை கொண்டவர். உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்.

இதற்காக யோகா செய்வது, உடற்பயிற்சி செய்வது, சைக்கிளிங் செய்வது போன்றவற்றை வாடிக்கையாக கொண்டுள்ளார். சைக்கிள் பயணம் செய்யும் போதெல்லாம் வழியில் மக்களை சந்தித்து பேசுவதுடன், உடல் ஆரோக்கியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவார். மக்கள், இளைஞர்கள் அவருடன் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்து மகிழ்வர்.

முதலமைச்சர் ஸ்டாலின் சைக்கிள் பயணம்

இந்நிலையில் இன்று(ஜன.29) காலை உத்தண்டி சுங்கச்சாவடி முதல் மாமல்லபுரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார். ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் போது அவர் அணிந்திருக்கும் உடை, பாதுகாப்பு உபகரணம் என அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்க்கும். அந்தவகையில் இன்று அவர் நியூ லுக்கில் வெள்ளை டி-சர்ட், பச்சை ஜர்க்கினில் யூத்தாக காணப்படுகிறார். ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் சைக்கிள் பயணம்
முதலமைச்சர் ஸ்டாலின் சைக்கிள் பயணம்

இதையும் படிங்க: மகாத்மா காந்தி 75-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு - முதலமைச்சர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

Last Updated : Jan 29, 2022, 3:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details