சென்னை:பேரறிஞர் அண்ணாவின் 54ஆவது நினைவு நாளையொட்டி, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்.3) வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.
பின்னர் சென்னை, காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்களும், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.