சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் மண்டலம் 9, 122ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஷீபா வாசு. இவர் திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினராக உள்ளார். நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி உயிரிழந்தார். திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினருமான மறைந்த ஷீபா வாசுவின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு அவரது திருவுருவப்படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.