சென்னை: உக்ரைன் ரஷ்யா போர் வெடிக்கத் தொடங்கிய நாள் முதல், அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்பதற்காக, மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன.
இந்நிலையில், உக்ரைனில் தவித்த தமிழ்நாடு மாணவர்களை மீட்பதற்காக, திருச்சி சிவா, எம்.எம்.அப்துல்லா, கலாநிதி வீராசாமி, ஜெசிந்தா, அஜய் யாதவ் உள்ளிட்ட ஐந்து பேர் அடங்கிய மீட்புக் குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழு டெல்லி சென்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து தமிழக மாணவர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மீட்கப்பட்ட மாணவர்கள்
இதனைத்தொடர்ந்து உக்ரைனில் தவித்த தமிழ்நாடு மாணவர்கள் படிப்படியாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் உக்ரைனில் தவித்து வந்த கடைசி தமிழ்நாடு மாணவர்கள் குழு நேற்று டெல்லி வந்தடைந்தனர். மேலும் அவர்களை டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.