தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை 13ஆம் தேதி முதலமைச்சர் கொண்டு வருவார்’ - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

நீட் தேர்வு நடக்கவிருப்பது முதலமைச்சரின் மனதுக்கு விரும்பமில்லாத நிகழ்வாக இருக்கிறது. நாளை மறுநாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாள், அன்று நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டு; குடியரசுத் தலைவருக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்று தரப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/11-September-2021/13037972_2.JPG
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/11-September-2021/13037972_2.JPG

By

Published : Sep 11, 2021, 10:42 PM IST

Updated : Sep 12, 2021, 11:05 AM IST

சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான 13ஆம் தேதி முதலமைச்சர் கொண்டு வருவார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானமத்தை 13ஆம் தேதி முதலமைச்சர் கொண்டு வருவார்
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சோழிங்கநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த ரமேஷ், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்றார். 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இம்மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர், சிமெண்ட் தரை, கீழ் நிலை நீர் தேக்க தொட்டி, பெண் செவிலியர்கள் பணியமர்த்தல், பெண் செவிலியர் தங்குமிடம், மகப்பேறு படுக்கை அறை வேண்டும் என்ற வேண்டுகோள் உள்ளது.
இதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று இவ்வாண்டிலேயே பெண் செவிலியர் பணி, குடியிருப்பு, சுற்றுசுவர் போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்ட உள்ளது. இதற்காக மாவட்ட ஆட்சியர் திட்ட மதிப்பீடு செய்வார்; மிக விரைவில் இம்மருத்துவமனை மேம்படுத்துவதற்காக கட்டமைப்புகள் செய்யப்பட்ட உள்ளது என தெரிவித்தார்.
சென்னையிலுள்ள மக்களை இங்கு குடியமர்த்த செய்ய காட்டிய அக்கரையை, அவர்களுக்கான வசதியைச் செய்ய வேண்டும் என யோசிக்காமல் 10 ஆண்டுகள் கடந்த ஆட்சியாளர்கள் இருந்துள்ளனர் என குற்றம்சாட்டினார்.
மேலும், இந்திய வரலாற்றில் தடுப்பூசி சாதனை முகாமாக நாளை 20 லட்சம் தடுப்பூசிகள் போடப்படவுள்ளது. நாளை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 4 கோடி என்ற அளவினை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
97.5% நோய் எதிர்ப்பு உடலில் உருவாகி உயிரிழப்பு தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்களை தேடி மருத்துவம் கடந்த மாதம் கிருஷ்ணகிரியில் தொடங்கப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 4,07,632 பேர் பயன்பெற்றுள்ளனர். அதில் 1,19,456 நீரழிவு நோயாளிகளும், 1,79,738 இரத்த அழுத்த நோயாளிகளும் பயனடைந்துள்ளனர். இந்த திட்டம் மூலம் மிக விரைவில் ஒரு கோடி பேர் பயன்பெற வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார்கள்.
நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானமத்தை 13ஆம் தேதி முதலமைச்சர் கொண்டு வருவார்
நீட் தேர்வு நடக்கவிருப்பது முதலமைச்சரின் மனதிற்கு விரும்பமில்லாத நிகழ்வாக இருக்கிறது. நாளை மறுநாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாள், அன்று நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டு; குடியரசு தலைவருக்கு அழுத்தம் கொடுத்து நீட்-க்கு விலக்கு பெற்றுத்தருவார்கள் என தெரிவித்தார்.
Last Updated : Sep 12, 2021, 11:05 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details