சென்னை:சர்க்கரை ஆலைகளுக்கு 2020-2021 அரவைப் பருவத்திற்குக் கரும்பு வழங்கிய பதிவு பெற்ற விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ. 150.89 கோடி வழங்கும் திட்டத்தை ஐந்து கரும்பு விவசாயிகளுக்கு வழங்கி தமிழ்நாடு மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில்தொடங்கிவைத்தார்.
மத்திய அரசு ஆண்டுதோறும் கரும்புக்கு நியாயமான, ஆதாய விலையை நிர்ணயம் செய்துவருகிறது. கரும்பு விவசாயிகளை ஊக்குவிக்கும்பொருட்டு, மதத்திய அரசு நிர்ணயிக்கும் விலைக்கு மேல் கூடுதலாகத் தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை வழங்கிவருகிறது.
மத்திய அரசின் ஊக்கத் தொகை
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை தனி நிதிநிலை அறிக்கை 2021-2022 அறிவிப்பின்படி, கரும்பு உற்பத்தி ஊக்கத் தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.42.50/-, சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ. 150/-, என மொத்தம் ரூ. 192.50/- தமிழ்நாடு அரசால், மத்திய அரசின் நியாயமான, ஆதாய விலையான ரூ. 2,707.50-யை விட டன் ஒன்றிற்குக் கூடுதலாக வழங்கப்படுகிறது.