சென்னை:அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றியானது நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கான அச்சாரமாக அமைந்துள்ளது. வரலாற்றில் பதிவாகக் கூடிய வெற்றியைத் தந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ‘திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி’ -முதலமைச்சர் பூரிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றியானது, 20 மாத கால திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Etv Bharat
நாடாளுமன்றத் தேர்தலில் இதைவிட பெரிய வெற்றியை மக்கள் வழங்குவார்கள்” எனக் கூறினார். "நான் ஏற்கனவே தேசிய அரசியலில்தான் உள்ளேன். யார் பிரதமராக வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது" எனத் தெரிவித்தார். ''நான்காம் தர மனிதரைப் போல பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நல்ல பாடத்தை புகட்டியுள்ளனர்'' என கூறினார்.
இதையும் படிங்க:திரிபுராவில் ஆட்சியை கைப்பற்றுமா காங்கிரஸ்? திமோக கட்சி தலைவருடன் ரகசிய பேச்சுவார்த்தை!