தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மக்களை தவறாக பேசும் அமைச்சர்களை  ஸ்டாலின் தைரியமாக கண்டிக்க வேண்டும்" - டிடிவி தினகரன் - மக்களிடம் நாகரிகமாக பேச வேண்டும்

தமிழ்நாட்டில் மக்களை தவறாக பேசும் அமைச்சர்களை முதலமைச்சர் ஸ்டாலின் தைரியமாக கண்டித்து வைக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 10, 2023, 5:31 PM IST

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று (மார்ச் 10) செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு மக்களின் நலனுக்காக ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை அங்கீகரிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். அது மக்களின் விருப்பமாகவும், அதுதான் எங்களின் விருப்பமாகவும் உள்ளது.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா மக்களின் நலனுக்கான ஒரு முக்கியமான விஷயம். அந்த சட்டத்தை நிறைவேற்ற ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால், ஆளுநர் தடை சட்ட மசோதாவை நிறைவேற்றாமல் தட்டி கழிப்பது ஆளுநர் மக்கள் நலனில் அக்கறை இல்லாததை காண்பிக்கிறது. ஆளுநரின் இந்த செயல்பாடுகள் மத்திய அரசுக்கு அவப் பெயரை உருவாக்கி வருகிறது.

இதையும் படிங்க: ”இந்தியாவிலேயே இப்படி யாருமே இல்லை” - பிரதமர் மோடியை வியக்க வைத்த துரைமுருகன்

என்.எல்.சி நிர்வாகம் கடலூரில் நிலம் கையகப்படுத்துவதை நாங்கள் கண்டிக்கிறோம். அதேபோல ஏற்கனவே நிலம் எடுத்த இடங்களில் என்எல்சி நிர்வாகம் கொடுத்த வாக்குறுதிகளையும், வேலைவாய்ப்புகளையும் முறையாக வழங்கவில்லை, இது இப்படியே சென்றால் தமிழ்நாட்டு மக்கள் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இது தொடர்பாக நாளை (மார்ச் 10) கடலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை ஆராய்ந்து, எங்களது கண்டனத்தை தெரிவிப்போம் என தெரிவித்தார். அதன்பின் விழுப்புரம் மாவட்டம் அருங்குறிக்கை பகுதியில் பள்ளி சுற்றுச்சுவர் திறப்பு விழாவில் பேசிய உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பொதுமக்களிடம், ஓட்டு போட்டு கிழித்து விட்டீர்களா என தரக் குறைவாக பேசியது குறித்து டிடிவி தினகரனிடம் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் பொன்முடி மக்களிடம் நாகரீகமாக பேச வேண்டும் என்றும், திமுக என்றாலே இரட்டை வேடம்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஒரு அரசியல்வாதியாக பொன்முடியின் செயல்பாடு எனக்கு வருத்தம் அளிக்கிறது. இதுபோன்று மக்களை தவறாக பேசும் அமைச்சர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தைரியமாக கண்டித்து வைக்க வேண்டும். இதுபோல செயல்களில் செய்தால் தான் அவருக்கும், அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் ஆட்சிக்கும் நல்லது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த CISF வீரர்கள் - டிஐஜி ஸ்ரீராம் தகவல்

ABOUT THE AUTHOR

...view details