தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்.. - இந்திய கடற்படை

தமிழ்நாடு மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 21, 2022, 6:38 PM IST

சென்னை:இந்தியக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு இன்று (அக்.21) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “10 மீனவர்கள் (தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், காரைக்காலைச் சேர்ந்த 3 பேர்) தங்களது விசைப்படகில் நடுக்கடலில் இன்று (அக். 21) மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஐஎன்எஸ் பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்புப் பணியிலிருந்த இந்தியக் கடற்படையினர், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், வீரவேல் என்ற மீனவரின் மீது குண்டு பாய்ந்து, அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவத்தில் இந்தியக் கடற்படையினரின் செயல் மிகுந்த வருத்தத்திற்குரியது. இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்படுவதால் ஏற்படும் துயரத்தை இந்தியப் பிரதமர் நன்கு அறிவார். இந்தியக் கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது.

எனவே, இந்த விசயத்தில் உடனடியாக பிரதமர் தலையிட்டு, இந்தியக் கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாளுவதற்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூடு

ABOUT THE AUTHOR

...view details