தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

All Party Meeting: நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம்.. - சட்டப்பேரவையில் ஆளுநர் உரை

All Party Meeting: நீட் தேர்வு மூலம் தமிழ்நாடு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அனைத்து கட்சி குழுவை உள்துறை அமைச்சர் சந்திக்க மறுத்த நிலையில், நீட் விவகாரத்தில் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம்..
நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம்..

By

Published : Jan 6, 2022, 11:57 AM IST

Updated : Jan 6, 2022, 1:03 PM IST

All Party Meeting: சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நேற்று (ஜனவரி 5) காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்கியது. இதில், ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து, ஆளுநர் உரையைப் புறக்கணித்து விடுதலை சிறுத்தை கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம்

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று (ஜனவரி.6) ஆரம்பிக்கப்பட்டு தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக நேரலையில் விவாதம் நடைபெற்றது.

நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு

சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையில், நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் வேண்டாம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையற்றது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம்" என்று தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை

ஆளுநர் உரைக்கு நன்றித்தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர், "நீட் தேர்வு மூலம் தமிழ்நாடு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு இன்னும் அனுப்பப்படவில்லை.

நீட் விவகாரத்தில் நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும். அனைத்து கட்சி குழுவை உள்துறை அமைச்சர் சந்திக்க மறுத்த நிலையில், நீட் விவகாரத்தில் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை எனவும், முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம்..

குடியரசு தலைவரிடம் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு மனு அளித்துள்ளது. நீட் விவகாரத்தில் மாநில அரசுகளின் உரிமையை மத்திய அரசு பறித்துவிட்டது. மத்திய அரசின் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

அனைத்து கட்சி குழுவினரை சந்திக்க உள்துறை அமைச்சர் மறுத்து வருகிறார். உள்துறை அமைச்சர் சந்திக்க மறுத்த நிலையில், அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது" என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்...

Last Updated : Jan 6, 2022, 1:03 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details