தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

IIT நுழைவுத் தேர்வில் வென்ற ஏழை மாணவனின் கல்விச் செலவை அரசு ஏற்கும் - முதலமைச்சர்

அரசுப் பள்ளியில் பயின்று IIT நுழைவுத் தேர்வில் வென்ற அருண்குமார் என்ற மாணவனின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்

By

Published : Oct 28, 2021, 12:22 PM IST

Updated : Oct 28, 2021, 7:53 PM IST

சென்னை:திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி பொன்னழகன்-பூவாத்தாள்.

முதலமைச்சர் பாராட்டு

இவர்களது மகன் அருண்குமார் செவல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர். இந்த ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT-ஹைதராபாத்) பொறியியல் படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இந்நிலையில், மாணவர் அருண்குமாரை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (அக்.28) தலைமை செயலகத்தில் நேரில் வரவழைத்து பாராட்டினார்.

முதலமைச்சர் பாராட்டு

எளிய பின்புலத்திலிருந்து வந்து, அரசுப் பள்ளியில் படித்து இச்சாதனையை நிகழ்த்திய மாணவரைப் பாராட்டிய முதலமைச்சர், அருண்குமாரின் மேற்படிப்புக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என உறுதியளித்தார்.

முதலமைச்சர் பாராட்டு

இதையும் படிங்க: நபிகள் நாயகத்திற்கு விழா எடுத்த முஸ்லிமல்லாத ஒரே தலைவர் பெரியார் - ரியாஸ் அகமது புகழாரம்

Last Updated : Oct 28, 2021, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details