தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை விபத்துகளை தடுப்பதே அரசின் நோக்கம் - முதலமைச்சர்  ஸ்டாலின் - நிதிநிலை அறிக்கை மீதான விவாதம்

சாலை விபத்துக்களை தடுப்பதே அரசின் முதன்மையான இலக்கு என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin answer for question  stalin talks about accident  debate on budget  கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின்  நிதிநிலை அறிக்கை மீதான விவாதம்  தமிழ்நாடு சட்டப்பேரவை
மு க ஸ்டாலின்

By

Published : Mar 21, 2022, 12:04 PM IST

Updated : Mar 21, 2022, 12:19 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022 - 23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த 18ஆம் தேதி பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 19ஆம் தேதி வேளான் நிதிநிலை அறிக்கையை எம் ஆர் கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இன்று (மார்ச் 21) முதல் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கியது. தற்போது முதல் நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 5 பேருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது. பிரபல பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் கேள்வி நேரத்தின் போது, “சாலை விபத்துகளை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக பாராட்டுகள், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை கிடைக்க தன்னார்வலர்களை ஊக்குவிக்க அரசு ஆவண செய்யுமா என்று சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டப்பேரவை உறுப்பினர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போதே, நான் பலமுறை இந்த சாலை விபத்துக்களைப் பற்றி, கவலையுற்று உரையாற்றியிருக்கிறேன். அதை மனதிலே வைத்து நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், “சாலைகளில் மக்களுக்குப் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகை செய்திட வேண்டும்” என்பதை இந்த அரசினுடைய முதன்மையான இலக்காக நாங்கள் அமைத்துக் கொண்டிருக்கிறோம்.

கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின்

அதற்காக என்னுடைய தலைமையில் உயர் மட்டக் குழுக் கூட்டம் கடந்த கடந்த ஆண்டு நவம்பர் 18 அன்று கூடி ஆலோசித்து, “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48” என்ற உயிர் காக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் விபத்துக்களில் சிக்குவோரின் உயிர் காப்பாற்றப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 18 முதல், இந்தாண்டு மார்ச் 18 வரை, அரசு மருத்துவமனைகளில் 29 ஆயிரத்து 142 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4,105 பேரும், ஆக மொத்தம் 33 ஆயிரத்து 247 பேர் இந்த “48 மணி நேர இலவச” சிகிச்சையை பெற்றுள்ளனர். அவ்வாறு சிகிச்சை பெற்றார்கள் என்பதைவிட, 33 ஆயிரம் குடும்பங்கள் இத்திட்டம் மூலம் காப்பாற்றப்பட்டிருக்கின்றன என்பதை அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டிற்கே முன்னோடியாக விளங்கும் இந்தத் திட்டத்திற்காக இதுவரை 29.56 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது என்பதையும், இத்திட்டம் மேலும் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்பையும், சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்பதையும் உறுதி செய்யக்கூடிய உயரிய நோக்கத்தோடு, அரசு இனி வரும் காலங்களிலும் தீவிரமாக செயல்படும் என்று பேரவைத் தலைவர் மூலம் இந்த விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

சாலை விபத்தில் சிக்கிய நபர்களை உடனடியாக, Golden Hours-க்குள் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து அனுமதித்து, உயிரைக் காக்கக்கூடிய மனிதநேய பண்போடு பணியாற்றும் நல்ல உள்ளங்களுக்கு நற்கருணை வீரன் என்ற நற்சான்றிதழும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது” என ஸ்டாலின் கூறினார்.

இதையும் படிங்க: மேகதாது அணை கட்ட எதிர்ப்பு - தமிழ்நாடு சட்டபேரவையில் தனித் தீர்மானம்

Last Updated : Mar 21, 2022, 12:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details