தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயக்குமார் கைது விவகாரம் - சட்டம் தன் கடமையை செய்யும்: ஸ்டாலின்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், சட்டம் தன் கடமையை செய்யும் என்று தெரிவித்தார்.

By

Published : May 10, 2022, 7:25 AM IST

ஜெயக்குமார் கைது விவகாரம்
ஜெயக்குமார் கைது விவகாரம்

சென்னை: காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். அப்போது உள்ளாட்சி தேர்தலில் சென்னை தண்டையார்பேட்டையில் கள்ள ஓட்டு போட்ட நரேஷ்குமார் விட்டுவிட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தலின் போது சென்னை தண்டையார்பேட்டை வார்டில் நரேஷ் குமார் கள்ள ஓட்டு போட்டார் என அவரை அவமானப்படுத்தி சாலையில் அவரை தாக்கி சாலை மறியலில் ஈடுபட்டு பொது மக்களுக்கு இடையூறாக இருந்ததால்தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு போடப்பட்டது.

நில அபகரிப்பு வழக்கில் சென்னை மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். அவைத் தலைவராக இருந்திருக்கிறார், சட்டத்துறை அமைச்சராகவும் இருந்தவர். அவரே சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டால் அரசு கைகட்டி வேடிக்கை பார்க்காது. சட்டம் தன் கடமையை செய்யும். அதற்காக நடவடிக்கை எடுத்துள்ளோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படிங்க :இலங்கையில் உச்சகட்ட குழப்பம்; ஆளுங்கட்சி எம்பி கொலை.. ரயில் போக்குவரத்துக்கு தடை!

ABOUT THE AUTHOR

...view details