டெல்லி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (31.3.2022) டெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில், நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அந்த மனுவில் தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்னைகளைப் போக்கவும், பல துறைகளின் தேவைக்கேற்ப 14 கோரிக்கைகளையும் விடுத்துள்ளார். அந்த கோரிக்கைகளின் விவரம் பின்வருமாறு,
1. நீர்வளப் பிரச்னைகள்: காவிரியின் குறுக்கே கர்நாடகாவால் மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்
2.மீன்வளம்:அ) பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்.
ஆ) "கச்சத்தீவு" மீட்பது மற்றும் தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது
3.எரிசக்தி:அ) நிலக்கரி குறித்த விவகாரங்கள் – தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அதிக அளவிலான நிலக்கரி பெறுவதற்கான முன்னெடுப்புகள் மற்றும் கூடுதலான ரயில் தொடர்கள் ஒதுக்கீடு செய்யக் கோருதல்.
ஆ) ரெய்கார் – புகழுர் உயர் மின் அழுத்த மின் தொடரமைப்பினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்தாக அறிவித்தல்.
4.நிதி:அ) மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயைப் பகிர்ந்து கொள்வது.
ஆ) ஜூன் 2022-க்குப் பின்பும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டைத் தொடர்ந்து வழங்குதல்.
5.சுகாதாரம்:அ) மருத்துவ மாணவர் சேர்க்கை கொள்கை மற்றும் தேசியத்தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (NEET) எதிர்ப்பு.
ஆ) உக்ரைனில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் படிப்பு தடைபட்ட நிலையிலிருந்து இந்தியாவில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் படிப்பைத் தொடர வழியைக் கண்டறிதல்.
6.வேளாண்மை:பிரதம மந்திரி வேளாண்மைப் பயிர் பாதுகாப்புத் திட்டத்திற்கு (PMFBY) ஒன்றிய அரசின் பங்களிப்பை முந்தைய நிலைக்கு உயர்த்துதல்.
7.தொழில்கள்:அ) காலணி உற்பத்தியில் பிஎல்ஐ (PLI) திட்ட அறிமுகம்.
ஆ) டிடிஐஎஸ் (DTIS) திட்டத்தில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்கு முன்னுரிமை ஒதுக்கீடு