தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியாளர்கள், அலுவலர்களுக்கு மடிக்கணினி, கணினிகள் வழங்கிய முதலமைச்சர் - CM stalin provides laptops to engineers

சென்னை: நெடுஞ்சாலைத் துறை வெளிப்படைத்தன்மையுடன் திறமையாக இயங்க பொறியாளர்கள், அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மடிக்கணினிகளை வழங்கினார்.

CM stalin provides laptops to engineers
CM stalin provides laptops to engineers

By

Published : Jul 8, 2021, 7:42 PM IST

நெடுஞ்சாலைத் துறை வெளிப்படைத் தன்மையுடன் திறமையாக இயங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 28 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல்செய்யப்பட்ட ஆயிரத்து 213 மடிக்கணினிகள், ஆயிரத்து 484 கணினிகளை அலுவலகப் பயன்பாட்டிற்காக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 8) தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார்.

அப்போது மு.க. ஸ்டாலின் ஏழு பொறியாளர்கள், அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு, தலைமைச் செயலர் வெ. இறையன்பு, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-II திட்ட இயக்குநர் பி. கணேசன், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் பி.ஆர். குமார் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு உயர்கல்வி மன்றம்: துணைத் தலைவராக அ.ராமசாமி நியமனம்!

ABOUT THE AUTHOR

...view details