சென்னை :தலைமைச் செயலகத்தில், இன்று (ஜூன்.28) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நவி மும்பை தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காகத் தமிழ்நாடு அரசின் நிதியுதவியாக 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் வ.ரெ.போ. கிருஷ்ணமூர்த்தியிடம் வழங்கினார்.
திமுக அரசு பொறுப்பேற்றதும், முடிவுறாமல் இருந்த நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூபாய் 25 லட்சம் முதலமைச்சரால் கடந்த ஆண்டு (10.12.2021) அன்று வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்டடப் பணிகளை முடித்திட கூடுதல் தொகைக்காக விடுக்கப்பட்ட நவிமும்பைத் தமிழ்ச் சங்கம் விடுத்த கோரிக்கையினை ஏற்று, கட்டடப் பணிகளுக்காக மேலும் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலை இன்று முதலமைச்சரால் வழங்கப்பட்டது.