தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து- முதலமைச்சர் உத்தரவு - அரசியல் கட்சி பிரமுகர்கள்

சென்னை: பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்து நேற்று (ஜூலை29) உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகளையும் ரத்து செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

cm stalin
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

By

Published : Jul 30, 2021, 7:35 PM IST

ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான வழக்குகள் தமிழ்நாடு அரசால் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டன. தற்போது 2012-2021 பிப்ரவரிவரை தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட சுமார் 130 வழக்குகளை ரத்து செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வழக்குகள் ரத்து

அதன்படி, தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியில் ஈவிகேஎஸ் இளங்கோவன், விஜயதாரணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், திமுகவில் கே.என். நேரு, எஸ்.எம். நாசர், மக்களவை உறுப்பினர் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படம்: அழைப்பிதழ் கொடுக்க டெல்லி விரைந்த சபாநாயகர்

ABOUT THE AUTHOR

...view details