தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

6 ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு அலுவலகங்கள் : முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

புதியதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 வருவாய் மாவட்டங்களில் ரூ.2 கோடியே 93 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 6 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

6 ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு அலுவலகங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
6 ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு அலுவலகங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

By

Published : Jan 23, 2022, 7:04 AM IST

சென்னை: 2021-22ஆம் ஆண்டிற்கான மனித வள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையில், புதியதாகத் தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய வருவாய் மாவட்டங்களில் ஆறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மனித வள மேலாண்மைத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 வருவாய் மாவட்டங்களில் 2 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜனவரி 22) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

இந்த நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கூடுதல் தலைமைச் செயலாளர்/ விழிப்புப்பணி மற்றும் நிர்வாகச் சீர்திருத்த ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) சிவ் தாஸ் மீனா, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் இயக்குநர் ப.கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ். முருகன் நியமனம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details