தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நகர் ஊரமைப்பு அலுவலகம் திறப்பு - மதுரை நகர் ஊரமைப்பு அலுவலகம் திறப்பு

மதுரை மாநகரில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

நகர் ஊரமைப்பு அலுவலகம் திறப்பு
நகர் ஊரமைப்பு அலுவலகம் திறப்பு

By

Published : Dec 15, 2021, 10:12 PM IST

சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 15) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில் மதுரை மாநகர், கூடல்புதூரில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகக் கட்டடத்தைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

மாநிலத்தில் நகர்ப்பகுதிகளில் திட்டமிட்டபடி சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக நகர் ஊரமைப்பு இயக்ககம் உருவாக்கப்பட்டது. முறைப்படுத்தப்பட்ட வளர்ச்சி நகரப் பகுதிகளில் ஏற்படுத்திட மண்டலத் திட்டங்கள், முழுமைத் திட்டங்கள் உள்ளிட்ட பணிகளை இவ்வியக்ககம் செய்து வருகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை ஆற்றிவரும் நகர் ஊரமைப்பு அலுவலகத்திற்கு சொந்தக் கட்டடம் கட்டும் வகையில், மதுரை மாநகர், கூடல் புதூரில் தரை மற்றும் முதல் தளத்துடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வலுவலகத்தில், இணை மற்றும் உதவி இயக்குநர்கள் அலுவலக அறைகள், பணியாளர்கள் அறைகள், கூட்டரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:80 மாற்றுத்திறனாளிகள் கைது!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details