தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானம்! - சிஏஏ

Stalin
Stalin

By

Published : Sep 8, 2021, 11:10 AM IST

Updated : Sep 8, 2021, 5:56 PM IST

17:46 September 08

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிஏஏவுக்கு எதிராக மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. அதில், ஒன்றிய அரசு 2019இல் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிராகவும், அகதிகளாக வருவோர் மீது மத ரீதியாக பாகுபாடு காட்டும் வகையில் உள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானம்!

அதில் மேலும், “ஒன்றிய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய இந்தியக் குடியுரிமை திருத்த சட்டம் 2019, இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், நம் நாட்டில் நிலைபெறும் மத நல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்று பேரவை கருதுகிறது.
மக்களாட்சி தத்துவத்தின் படி ஒரு நாட்டின் நிர்வாகம் என்பது அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் கருத்தினையும், உணர்வுகளையும் உணர்ந்து அமைந்திருக்க வேண்டும். ஆனால், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டமானது அகதிகளாக இந்நாட்டிற்கு வருபவர்களை அவர்களின் நிலை கருதி அரவணைக்காமல் மத ரீதியாகவும், எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பொருத்தும் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில், நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

11:04 September 08

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தின்போது, இலங்கை தமிழர்கள் குறித்து ஒன்றிய அரசு கவலைப்படவில்லை என மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019ஐ இரத்து செய்யக் கோரும் அரசினர் தனித் தீர்மானத்தினை முன்மொழிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிஏஏ சட்டத்தை எதிர்க்க வேண்டிய தேவை இருக்கிறது

குடியுரிமை பெற மதம் அடிப்படை இல்லை. ஒன்றிய அரசு மதத்தை அடிப்படையாக பார்க்கிறது அதனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டிய தேவை இருக்கிறது. மக்களை மத ரீதியாக பிரிக்கிறது என்பதால் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திமுக ஆரம்ப காலத்திலேயே எதிர்த்தது.
அகதிகளாக வருபவர்களை சக மனிதனாக பார்க்க வேண்டும். ஏற்கனவே துன்பப்பட்ட மக்களை மேலும் துன்ப படுத்தக்கூடாது பாகிஸ்தான், வங்க தேசம் மக்கள் வரலாம் என்றால் இலங்கைத் தமிழர்கள் ஏன் வரக்கூடாது.

ஒன்றிய அரசு இலங்கை தமிழர்களை வேறாகப் பிரித்துப் பார்க்கிறது. அதனால் தான் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறோம். குடியுரிமை திருத்த சட்டத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டையும் கைவிட வேண்டும். எனவே இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதசார்பின்மை கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் ஒன்றிய அரசின் இந்திய குடியுரிமத் திருத்த சட்டம் 2019ஐ ரத்து செய்திட ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக்கோரும் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்தார். இந்தத் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நேரமில்லா நேரத்தின்போது தங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங்க : சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பு; அதிமுக வெளிநடப்பு!

Last Updated : Sep 8, 2021, 5:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details