சென்னை:அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி ராஜநந்தினி.
இவர்களுக்கு 14 வயதில் ஜனனி என்ற மகள் உள்ளார். பத்தாம் வகுப்பு படித்துவரும் இவர், சிலம்பாட்டம், ஸ்கேட்டிங், வில் வித்தை போன்ற போட்டிகளில் மாநில அளவில் பரிசுகளைப் பெற்றுள்ளார்.
சிறுமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் கடந்த 2019ஆம் ஆண்டு சிறுமி ஜனனி வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்ததில் சிறுமிக்கு இரண்டு கிட்னிகள் செயலிழந்து போனது தெரியவந்தது.
இதனையடுத்து தாயார் ராஜநந்தினி மகளுக்குத் தனது ஒரு கிட்னியை தானமாக கொடுத்துள்ளார். ஆனால், அந்த கிட்னி 15 நாட்களுக்குப் பிறகு செயலிழந்து போனது.
சிறுமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் பின்னர் என்ன செய்வது எனத்தெரியாமல் திகைத்துப் போன தாய், இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உதவி செய்யுமாறு மனு கொடுத்திருந்தார். சிறுமிக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் இவர்கள் தங்கியுள்ளனர். இதனிடையே மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு விஜயகுமார் சென்றுவிட்டார். இந்த நிலையில் சிறுமி ஜனனி தனக்கு உதவி செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதையடுத்து நேற்று (செப்.26) முதலமைச்சர் சிறுமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சிறுமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.27) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் போயிங் விமான பாகங்கள் தயாரிப்பு- முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்