சென்னை:தமிழ்நாட்டில் கரோனா பரவல் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழு மருத்துவத் துறை உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன், ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, சுகாதாரத் துறை அலுவலர்கள், பொதுத்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.