தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்கக் கோரி முதலமைச்சர் கடிதம் - பிரதமர் மோடி

தமிழ்நாட்டின் எட்டு மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
முதலமைச்சர் ஸ்டாலின்

By

Published : Nov 18, 2021, 6:50 PM IST

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் (CM Stalin) பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் உள்ள எட்டு மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற அனுமதி பெறப்பட்டுள்ளது.

அவை,

1. திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி - 65km (24.05.2016)
2. வள்ளியூர் - திருச்செந்தூர் - 70km (24.05.2016)
3. கொள்ளேகால் - ஹனூர் - எம்எம் ஹில்ஸ் - பாலார் சாலை - தமிழ்நாடு எல்லை முதல் மேட்டூர் வரை - 30km (21.11.2016)
4. பழனி - தாராபுரம் - 31 km (12.05.2017)
5. ஆற்காடு - திண்டிவனம் - 91km (12.05.2017)
6. மேட்டுப்பாளையம் - பவானி - 98km (12.05.2017)
7. அவிநாசி - மேட்டுப்பாளையம் - 38km (12.05.2017)
8. பவானி - கரூர் - 77km (12.05.2017) ஆக மொத்தம் 500 கிலோ மீட்டரான மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட எட்டு சாலைகளும் மிக முக்கியமானவை.

முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்

இவற்றில் திருவண்ணாமலை போன்ற புனித யாத்திரை மையங்களை இணைக்கும் சாலைகள், திருச்செந்தூர், பழனி, முக்கிய வர்த்தக, சுற்றுலா மையங்கள் ஆகியவையும் அடங்கும். இச்சாலைகளைப் பயன்படுத்துபவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உடனடியாக அவற்றை மேம்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:TN Cabinet Meeting Postponed: அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details