சென்னை:இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில்களில் மொட்டை போடும் (தலைமுடி மழிக்கும்) பணியாளர்களுக்கு மாதம் ரூ. 5000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை, வேப்பேரியில் உள்ள பி.கே.என். அரங்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து 25 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 5000 ஊக்கத்தொகை திட்டம் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 349 கோயில்களில் 1744 மொட்டை போடும் பணியார்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்திருந்தது.
மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 5000 ஊக்கத்தொகை திட்டம் அதன் தொடர்ச்சியாக இன்று இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அரிசி, பருப்பு உள்ளிட்ட 16 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது.
மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 5000 ஊக்கத்தொகை திட்டம் இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு 10 கோடியே 46 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இந்த மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் திருக்கோயில் நிதியில் இருந்து வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாலைகளை சீரமைக்கக்கோரிய வழக்கு: மதுரை கலெக்டர் பதில் அளிக்க உத்தரவு