சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கிண்டியிலுள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (மார்ச் 21) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கலந்துக்கொண்டனர்.