சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இதனிடையே வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆந்திரா-சென்னைக்கு இடையே நேற்று கரையைக் கடந்தது. இதன் காரணமாக சென்னை, புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்தது.
மழையால் சாலை, வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். ஸ்டாலின் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்து, மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிவருகிறார்.
அந்தவகையில், இன்று (நவ. 12) காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஸ்டாலின் ஆய்வுசெய்தார்.